இந்தியாவில் தற்போது நாம் எதிர்கொள்ளும் ஒரேபிரச்சனை வேலையின்மைதான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். மேலும், வேலையில்லா திண்டாட்டம் மட்டுமின்றி சீனாவுக்கும் சவால் விடும்நிலையை உருவாக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு நாட்டை நாம் ஒருபோதும் இயக்க முடியாது என்று கூறினார்.
இதனையடுத்து, ஒருவரின் சிந்தனையே சரி, மற்றவர்கள் கூறுவது தவறு என்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன். அரசியல் காரணங்களுக்காக எனது அன்பான நாடு இந்தியா தற்போது பிரிக்கப்பட்டுள்ளது என்று துபாயில் பேசியுள்ளார் ராகுல் காந்தி.