இங்கிலாந்து அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அண்மையில் அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு சர்வதேச அளவில் அரசியல்வாதிகள் மட்டும் பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் ஆகியோரின் இந்த முடிவால் அரச குடும்பம் கவலையடைந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அறிக்கையும் வெளியிட்டது. இருப்பினும் அவர்களது முடிவுக்கு மதிப்பளித்து, அரச குடும்பத்திலிருந்து விலகி சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள ஒப்புக்கொண்டது.

Advertisment

queen elizebeth decision on using the word royal

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தங்களது நேரத்தை வடஅமெரிக்கா மற்றும் கனடாவில் பிரித்து செலவிட போவதாக இந்த தம்பதி அறிவித்த நிலையில், தற்போது இருவரும் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். சஸ்ஸக்ஸ் ராயல் என பெயரிடப்பட்ட நிறுவனம் ஒன்றையும் அவர்கள் ஆரம்பித்துள்ளனர். அந்த பெயரில் இணையதளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதால் 'ராயல்' என்னும் பெயரை அவர்கள் உபயோகிக்க இங்கிலாந்து ராணி தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த ஆலோசனைகள் அரச குடும்பத்தில் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.