கால்பந்து மைதானத்தை விடப் பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களைச் சேர்த்தது போன்ற அளவுடைய மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிமீ வேகத்தில் வந்து கொண்டிருக்கும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இது செப்டம்பர் 14ம் தேதி பூமியைக் கடந்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 கியூஎல் 2 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லின் அளவை பொறுத்தவரை, இது ஆபத்தான வான்பொருள் என வகைபடுத்தப்பட்டாலும், இது பூமியைத் தாக்காது என்பதால் இதனால் நமக்கு ஏதும் அபாயம் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.