பில்லியர்ட்ஸ் விளையாட சென்றவர்களை தெறித்து ஓடவைத்த பாம்பு...

பில்லியர்ட்ஸ் டேபிளின் உள்ளே இருந்து மலை பாம்பு ஒன்று வெளியே வந்து விளையாட சென்றவர்களை பயமுறுத்திய சம்பவம் ஆஸ்திரேலியா நாட்டில் நடந்துள்ளது.

python found in billiard pool

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் பகுதியில் ஒரு வீட்டில் பில்லியர்ட்ஸ் விளையாடும் மேஜையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அந்த வீட்டிலிருந்தவர்கள் அங்குபில்லியர்ட்ஸ் விளையாட சென்ற போது பந்து செல்லும் துளை வழியாக திடீரென பாம்பு ஒன்று தலையை தூக்கி பார்த்துள்ளது. இதனால் அங்கு விளையாட வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர் . பின்னர் மீட்பு குழு ஒன்று அழைக்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர்.பில்லியர்ட்ஸ் டேபிள் உள்ளே இருந்து பெரிய மலை பாம்பை மீட்ட இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Australia weird
இதையும் படியுங்கள்
Subscribe