நோய் காரணமாக பதவி விலகும் புதின்...? ரஷ்ய அரசியலில் பரபரப்பு...

putin may step down because of parkinson says sources

ரஷ்யா அதிபர் புதின் வரும் ஜனவரி மாதம் தனது பதவி விலகல் குறித்து அறிவிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் நீண்டகால அதிபரான புதினுக்கு பார்கின்சன் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவில் தகவல்கள் பரவி வரும் சூழலில் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் என்று ஊடக செய்தி வெளியாகியுள்ளது.

மாஸ்கோவை சேர்ந்த அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி 'தி சன்' பத்திரிகையிடம், "ரஷ்ய அதிபரின் மகள்கள் மற்றும் 37 வயது காதலி அலினா கபீவா ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி புதின் பதவியை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார்" என்று கூறியுள்ளார். தனது குடும்பத்தினரின் ஆலோசனைகளைப் பெரிதும் மதிக்கக்கூடியவராகப் பார்க்கப்படும் புதின், தனது குடும்பத்தாரின் யோசனையை ஏற்றுப் பதவி விளக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புதினுக்கு பார்கின்சன் நோயின் அறிகுறிகள் தென்பட்டதால், எதிர்காலத்தில் அவர் பார்கின்சனால் அவதிப்படக்கூடும் என்று பேசப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், முன்னாள் அதிபர்களுக்கு குற்றவியல் வழக்குகளில் தண்டனை வழங்கத் தடை விதிக்கும் சட்டம் ஒன்றையும் ரஷ்யா அரசு சட்டமியற்றுபவர்களுக்கு பரிந்துரைத்திருப்பதால், புதினின் ஓய்வு குறித்த தகவல்கள் உறுதியானதாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Russia Vladimir putin
இதையும் படியுங்கள்
Subscribe