Advertisment

விரைவில் ரஷ்ய அதிபர் புதின் திருமணம்..?

asrdgf

உலகின் அதிகாரமிக்க தலைவர்களில் மிகமுக்கியமானவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். 66 வயதான இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு லியுட்மில்லா புடீனா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதனை தொடர்ந்து ரஷ்யாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலீனா கபாயீவாவுடன் புதின் நெருக்கமாக இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. இதனை பல வருடங்களாகமறுத்து வந்த புதின், தற்பொழுது நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். 2007 ல் விளையாட்டு துறையிலிருந்து ஓய்வுபெற்ற 35 வயதான அலீனா ஒலிம்பிக் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

marriage Russia Vladimir putin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe