அதிபர் புதின் முற்றிலும் நலமாக உள்ளார் - ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு!

putin

ரஷ்யஅதிபர்விளாடிமிர் புதினின் உள்வட்டாரத்தில்உள்ள ஒருவருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்துபுதின் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பிராந்திய பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள புதின் இந்த வாரம் தஜிகிஸ்தான் செல்வதாக இருந்த நிலையில், அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதால் அந்தப் பயணம் இரத்தாகியுள்ளதாக ரஷ்யஅதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பத்திரிகையாளர்களைச் சந்தித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "அதிபர் முற்றிலும் நலமாக உள்ளார்" என தெரிவித்துள்ளதோடு, புதின் கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் பரிசோதனையின் முடிவு என்ன என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.

PRESIDENT VILADIMIR PUTIN Russia
இதையும் படியுங்கள்
Subscribe