ADVERTISEMENT

கிரேட்டா விஷயத்தில் புதின்-டிரம்ப் காட்டிய ஒற்றுமை... குழப்பத்தில் இணையவாசிகள்...

01:06 PM Oct 04, 2019 | kirubahar@nakk…

உலகநாடுகள் பங்குபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய கிரேட்டா என்ற சிறுமியின் பேச்சு பலரது பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரேட்டாவின் பேச்சை விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புதினும் கிரேட்டாவை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயதான சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத உலக தலைவர்களை கடுமையாக சாடினார். மேலும் இந்த கூட்டத்தின் நடுவே டிரம்ப் அங்கு வந்த போது கிரேட்டா, டிரம்ப்பை கோபத்துடன் பார்த்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. இதனை டிரம்ப் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து ரஷ்ய அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளித்த அவர், "நான் கூறும் பதில் உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் கிரெட்டா துன்பெர்க்கின் பேச்சு பற்றிய பொதுவான உற்சாகமூட்டும் கருத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தற்போது இருக்கும் நவீன உலகம் சிக்கலானது, வித்தியாசமானது. இதனை கிரெட்டாவுக்கு யாரும் விளக்கவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் வசிக்கும் மக்களும், ஸ்வீடனில் இருப்பதைப் போல பணக்காரர்களாக வாழ விரும்புகிறார்கள்.

இளம் தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்குக் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் குழந்தைகளையும், வளரும் இளம் பருவத்தினரையும் தங்களுடைய சுய எண்ணத்துக்காகப் பயன்படுத்துவதும் நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது" என தெரிவித்தார். பெரும்பாலும் டிரம்ப், புதினுக்கு இடையே கருத்து ஒற்றுமை குறைவு என்றாலும், இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளதை இணையவாசிகள் பலரும் குழப்பத்துடன் பார்த்து வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT