Advertisment

விற்பனைக்கு வந்த தூய்மையான மழைநீர்... அமெரிக்காவில் அமோகம்!

நிலத்தடி நீரைதான் உலகில் உள்ள அனைத்து முன்னணி குடிநீர் விற்பனை நிறுவனங்களும் எடுத்து தூய்மைப்படுத்திவிற்பனை செய்துவந்த நிலையில் விண்ணிலிருந்து பொழியும் மழையை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்திற்குஅமெரிக்காவில்வரவேற்புகள்அதிகரித்துள்ளது.

Advertisment

Pure Rain Water for Sale...

உலகில் பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் நிலத்தடியில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்துபாட்டிலில் அடைத்து விற்பனை செய்துவரும் நிலையில் அமெரிக்காவில் ரிச்சர்ட்ஸ் ரெயின் வாட்டர் என்கின்ற நிறுவனம் நீருக்காக மழையையேநம்பியுள்ளது. நீர் மாசுபாடு தற்போது அதிகரித்து வரும் நிலையில், தூய்மையான நீர் என மழைநீரை கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்பதை இந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பாகும்.

Advertisment

Pure Rain Water for Sale...

2000 வது ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் மழைத்துளிகளை அரை லிட்டர் பாட்டில்களில் நிரப்பி விற்றுவருகிறது.வீட்டின் மொட்டை மாடிகளில் இருந்து பெறப்படும் மழைநீரில் முதல் 10 நிமிடங்கள் சேகரிக்காமல் விட்டுவிட்டு அதன் பிறகு வரும் நீரை பைபர் கண்ணாடி குடுவைகளில் அடைத்து அல்ட்ரா வயலெட்ஒளி,ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், குளோரினுக்கு பதிலாக ஆக்சிசன் ஆகிய மூன்று நிலை வடிப்பான்கள் மூலம் சுத்திகரித்து விற்று வருகிறது.

ஆயிரம் சதுர அடி இடத்தில் மூன்று சென்டிமீட்டர் மழை பெய்தால் அதன்மூலம் 2280 லிட்டர் தூய்மையான நீர் கிடைக்கும். அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அனுமதிபெற்ற இந்த முதல் நிறுவனத்திற்கு தற்போது வரவேற்பு அதிகரித்து வருகிறது.

America Drinking water rain sales water
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe