அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை: அமெரிக்க தலைநகரில் பொது அவசர நிலை அறிவிப்பு!

cabitol building

அமெரிக்காவின் புதிய அதிபராகஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கஅமெரிக்க நாடாளுமன்றம் இன்று (07.01.2021) கூடியது. அப்போது நாடாளுமன்றத்தில் நுழைந்தடொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்று பேர் உயிர்க்குஆபத்தானநிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம்தொடர்பாக, இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைக்கு அமெரிக்கதலைவர்கள் மட்டுமின்றி, பிற உலக நாடுகளின்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தியபிரதமர் மோடி, ‘சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது’ எனகூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள அந்நாட்டின் தலைநகர் வாஷிங்டனில் 15 நாட்களுக்குப் பொது அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜனவரி 21 ஆம் தேதி வரை அங்கு பொது அவசர நிலை நீடிக்கும் எனவாஷிங்டன் மேயர் அறிவித்துள்ளார்.

Joe Biden trump washington
இதையும் படியுங்கள்
Subscribe