Skip to main content

இந்தியாவிற்காக சீன நிறுவனத்துடனான உறவை முறிக்கும் பப்ஜி!!! 

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

PUBG

 

இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை அடுத்து சீன நிறுவனம் டென்சென்ட் உடனான ஒப்பந்தத்தை பப்ஜி நிறுவனம் ரத்து செய்துள்ளது.

 

பப்ஜி நிறுவனமானது தென்கொரிய நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் தயாரிப்பாக வெளியான பப்ஜி மொபைல் விளையாட்டுச் செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியுள்ளது.

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்குத் தடை விதித்தது. உலகின் இரண்டாவது பெரிய நாட்டில் விதிக்கப்பட்ட இந்தத் தடையானது அந்நிறுவனத்திற்கு கணிசமான வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பப்ஜி நிறுவனம் அந்தத் தடையை இந்தியாவில் விலக்கும் பொருட்டு சீன நிறுவனத்துடனான உறவை முறித்துள்ளது.

 

பப்ஜி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் புரிந்துகொண்டு மதிப்பளிக்கிறோம். தனிநபர் விபரம் குறித்தான தரவுகளைப் பாதுகாப்பதே எங்களது முதன்மைக் குறிக்கோள். இந்திய அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீண்டும் இந்தியாவில் பப்ஜி சேவை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசுடன் இணைந்து எடுக்க இருக்கிறோம்" என அதில் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியாவில் மீண்டும் பப்ஜி!!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Pubg is back in India

 

பிரபல மொபைல் கேம் 'பப்ஜி' இந்தியாவில் மீண்டும் வரவிருக்கிறது. 

 

தென்கொரிய நாட்டின் பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது. 

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு தடை விதித்தது. குறிப்பாக பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ததால் இந்த விளையாட்டு கடந்த ஆண்டு இந்திய அரசால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 

 

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பப்ஜி விளையாட்டை மாற்றி அமைத்து மீண்டும் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு வருகிறது. இது குறித்து மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது மூன்று மாத சோதனை அடிப்படையில் இந்த விளையாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

பப்ஜி விளையாட்டில் மூழ்கிய கல்லூரி இளைஞர் திடீர் தற்கொலை... போலீசார் விசாரணை!

Published on 17/05/2022 | Edited on 17/05/2022

 

pubg Police investigation!

 

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த நிலையில்,  திடீரென அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டே 'பப்ஜி' எனும் மொபைல் கேமை விளையாடி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றுவிட்ட நிலையில் அருண்குமார் பப்ஜி விளையாடி கொண்டிருந்துள்ளார். அவரது குடும்பத்தார் வீடு திரும்புகையில் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த இளைஞனின் அண்ணன் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த பொழுது அருண்குமார் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.