Skip to main content

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் நம்பிகையூட்டும் தமிழ்க்குரல்!

Published on 18/09/2020 | Edited on 18/09/2020

 

A promising Tamil voice at the International Conference on Persons with Disabilities!

 

 

கரோனா காலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்தும் அதை எப்படி சீர்செய்வது என்பது குறித்தும் விவாதிப்பதற்கான சர்வதேசக் கருத்தரங்கத்தை, காணொளி மூலம் வேர்ல்ட் ஹூமானிட்டேரியன் அமைப்பின்  (World Humanitarian Drive) மலேசிய கிளை ஏற்பாடு செய்திருந்தது.

 

ஜெர்மனி, ரஷ்யா, ஃப்ரான்ஸ் உட்பட பல நாடுகளைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்தை முன்னெடுக்கும் அமைப்புகளின் சர்வதேசப் பிரதிநிதிகளும், மலேசியத் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சர்வதேச வாழ்வியல் மற்றும் மனநல ஆலோசகரான டாக்டர் ஃபஜிலா ஆசாத்தும்  பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். எந்த ஒரு பிரச்சனையான சூழலையும் சமாளித்து எப்படி வெற்றி காண்பது? எதிர்வரும் பிரச்சனைகளை எளிதாக்கி மகிழ்ச்சியான மனநிலையை எப்படி தக்க வைத்துக்கொள்வது? என்ற சூட்சுமத்தையும், நேர்மறை எண்ணங்களும் நேர்மறை வார்த்தைகளும் வாழ்வில ஏற்படுத்தும் நன்மைகளையும், பற்றி ஆதாரங்களுடன் டாக்டர் ஃபஜிலா ஆசாத் எடுத்துரைத்து அனைவரையும் கவர்ந்தார்.

 

வார்த்தைகளுக்கும் மூளையின் செயல்பாடுகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை, விளக்கிய டாக்டர் ஃபஜிலா ஆசாத், தமிழகத்தில் வெகு காலத்திற்கு முன்பே ‘மாற்றுத் திறனாளிகள்’ என்ற சொல் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், அதன்மூலம் தமிழகத்தில் மட்டுமன்றி அதனைப் பின்பற்றி இந்தியா முழுவதிலும்,  சமூதாயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் உலக அரங்கில் எடுத்துரைத்தார். மேலும் அவர் கூறும்போது, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் அரசாங்க வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை முன்னெடுத்ததையும் அதுவே பின்னாட்களில் சட்டமாக அமல் படுத்தப்பட்டதையும் எடுத்துரைத்தபோது சர்வதேச மாற்றுத்திறனாளி தலைவர்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவரும் சமூக அக்கறைக்கான முன்னெடுப்புகளை அறிந்து வியப்பு தெரிவித்தனர்.

 

அதேபோல் இன்றைய கரோனா காலகட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளின் பிரச்னைகளையும் சிரமங்களையும் புரிந்துகொண்டு அவர்களுடைய இயல்பு வாழ்க்கை சீராக இருப்பதற்கான நடவடிக்கைகளை இபோதைய தமிழக அரசும், தொண்டு நிறுவனுங்களும் முன்னெடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டவர், மாநில அளவிலும் உலக அளவிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேவைகளை உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ள, அதை அரங்கம் ஆரவாரித்து வரவேற்றது. மனிதனின் உறுப்புக்களிலேயே கண்ணுக்கு தெரியாத உயர்ந்த உறுப்பு நம்பிக்கைதான் என்பதை இந்த அரங்கம் உலகிற்கு போதிப்பதாக அமைந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மெரினாவில் கடல்சீற்றம்; சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைமேடை

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Sea rage at the marina; A platform for disabled persons with disabilities

 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தீவிரப்புயலான 'மாண்டஸ்' சென்னையில் இருந்து தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Sea rage at the marina; A platform for disabled persons with disabilities

 

சென்னையில் பட்டினப்பாக்கம், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் கண்டுகளிக்க மெரினா கடற்கரையில் சிறப்பாக உருவாக்கப்பட்ட மேடை கடல் அலை சீற்றத்தால் சேதமடைந்துள்ளது.  அண்மையில் இந்த நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் பலர் கடலினை மிக அருகில் கண்டுகளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

காவல் மரண வழக்கு: மாற்றுத்திறனாளியை சிறையில் தாக்கியது அம்பலம்... உண்மை கண்டறியும் குழு பகீர் தகவல்

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

salem district disability person incident police investigation


சேலம் மாற்றுத்திறனாளி காவல் மரண வழக்கை விசாரித்த உண்மை கண்டறியும் குழுவினர், அவரைச் சிறைக்குள் வைத்து காவலர்கள் தாக்கியிருப்பதாகப் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.

 

சேலம் அருகே உள்ள கருப்பூர் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). மாற்றுத்திறனாளி. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நடந்த ஒரு திருட்டு வழக்கில் காவல்துறையினர் அவரைக் கைது செய்து, நாமக்கல் கிளைச்சிறையில் அடைத்தனர்.

 

திடீரென்று அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

காவல்துறையினர் அடித்துச் சித்ரவதை செய்ததால்தான் பிரபாகரன் உயிரிழந்தார் என்றும், காவல் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் போராடினர்.

 

இதையடுத்து, சேந்தமங்கலம் எஸ்ஐ மற்றும் ஒரு காவலர், புதுச்சத்திரம் பெண் எஸ்ஐ ஆகிய மூன்று பேரும் கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதன்பிறகே, பிரபாகரனின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.

 

இதற்கிடையே, பிரபாகரன் மரணம் குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அவருடைய குடும்பத்திற்கும் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.

 

இந்நிலையில், பிரபாகரன் மரணம் குறித்து மக்கள் கண்காணிப்பகம் மற்றும் காவல் மரணங்களுக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் உண்மை கண்டறியும் குழுவினர் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் ஊடகத்தினரிடம் கூறியது:

 

"உயிரிழந்த பிரபாகரனுக்குத் திருட்டு வழக்கில் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவரைச் சேந்தமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

அவரைச் சட்ட விரோதமாக அடைத்து வைத்து எஸ்ஐ சந்திரன் விசாரித்தது, காவல் ஆய்வாளர் சதீசுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது. பிரபாகரனைக் கடத்திச்சென்று விட்டார்கள் என ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக அவரை ஜன. 12-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

 

அப்போது பிரபாகரனின் மூக்கில் காயம் இல்லை. ஆனால் மருத்துவமனையில் சேர்க்கும்போது அவருடைய மூக்கில் ரத்த காயம் இருந்துள்ளது. அதனால் சிறையில் அவரைத் தாக்கியிருப்பது தெரிகிறது. இதனால் நாமக்கல் கிளைச்சிறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

இறந்தவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்சி., எஸ்டி., சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு பதிவு செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்த காவல்துறையினர் பல்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு ஆசிர்வாதம் கூறினார். பேட்டியின்போது, வழக்கறிஞர்கள் தமயந்தி, அசோகன், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் வசந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.