Skip to main content

நியூசிலாந்து அமைச்சரவையில் முதல் இந்தியர்... யார் இந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன்...?

Published on 02/11/2020 | Edited on 02/11/2020

 

priyanca radhakrishnan is first indian to beomes newzeland minister

 

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டனின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

நியூசிலாந்து நாட்டின் 53 -ஆவது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெற்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசு, 2020 செப்டம்பர் 6 அன்று அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைபெற்ற தேர்தலிலும் ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. மொத்த வாக்குகளின் சுமார் 50 சதவீத வாக்குகளைப் பெற்று, 1930 -ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்நாட்டுத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கட்சி என்ற சாதனையைத் தொழிலாளர் கட்சி இந்தத் தேர்தலில் பெற்றுள்ளது. 

 

இதனைத் தொடர்ந்து ஜெசிந்தா ஆர்டன் தலைமையிலான அரசு அமைச்சரவையை அமைத்துள்ளது. முதற்கட்டமாக ஐந்து அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை வரும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்க உள்ளது. இந்தப் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே நியூசிலாந்து நாட்டில் அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் இந்தியர் ஆவார். 41 வயதான பிரியங்கா 'சமூக மற்றும் தன்னார்வத் துறை' அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கேரளாவில் பிறந்த இவர், சென்னையிலும் சிங்கப்பூரிலும் வளர்ந்து பின்னர் மேற்படிப்பிற்காக நியூசிலாந்து சென்றார். அதன்பின்னர் அங்கே பணியாற்றிய இவர், தன்னை தொழிலாளர் கட்சியில் இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வந்தார். கேரளாவின் கொச்சியைப் பூர்விகமாகக் கொண்ட இவர் ஆக்லாந்து தொகுதியிலிருந்து தற்போது இரண்டாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒரே ஒருவருக்கு கரோனா! - ஒட்டுமொத்த நாட்டுக்கும் லாக்டவுன் போட்ட நியூசிலாந்து!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

newzealand pm

 

உலகில் கரோனா தொற்றைச் சிறப்பாகக் கையாண்ட சில நாடுகளில், நியூசிலாந்தும் ஒன்று. உலகம் முழுவதும் லட்சக் கணக்கானோர் கரோனாவிற்கு பலியாகியுள்ள நிலையில், நியூசிலாந்தில் இதுவரை கரோனாவிற்கு 26 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆறுமாதங்களாக புதிய கரோனா பாதிப்பு எதுவும் பதிவாகாமல் இருந்து வந்தது.

 

இந்தநிலையில் தற்போது, எந்தவித வெளிநாட்டுத் தொடர்பும் இல்லாத ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்தில் நாடு தழுவிய மூன்றுநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நபர் ஆக்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால், அங்கு மட்டும் ஒருவாரம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஊரடங்கு அறிவிப்பை வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பாதிக்கப்பட்ட நபருக்கு டெல்டா வகை கரோனா வைரஸ் பாதித்து இருக்கலாம் எனவும், டெல்டா வைரஸை சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர், "டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தவறினால் என்ன ஆகும் என்பதைப் பிற இடங்களில் பார்த்தோம். நமக்கு ஒரு வாய்ப்புதான் கிடைக்கும்" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 
 

Next Story

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி; கம்பேக் கொடுக்கும் முன்னணி இந்திய பந்துவீச்சாளர்கள் !!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

 

INDIAN TEAM

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூஸிலாந்தும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த இறுதி போட்டி வரும் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான 15 பேர்கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றமில்லை. அதேநேரத்தில் கே.எல் ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்டில் விளையாடாத பும்ரா, அணிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் காயம் அடைந்த ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். 

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு: விராட் கோலி, ரஹானே, ரோகித் ஷர்மா, சுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், விருத்திமான் சஹா, அஸ்வின், ஜடேஜா,பும்ரா, இஷாந்த் சர்மா , முகமது ஷமி, உமேஷ் யாதவ்.