Skip to main content

சிந்திய காபிக்காக துப்பரவுசெய்த செய்த பிரதமர்

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடே நாடாளுமன்றத்தில் இருந்த அசுத்ததை தாமாகவே சுத்தம் செய்தார். 

 

அரசியல்வாதிகள் மற்றும் பெரிய பொறுப்புத்துறைகளில் இருப்பவர்கள்  என்றாலே சிறிய சிறிய தவறுதல்கள் நடக்கும் பொழுது பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணம் பலரிடம் இருந்து வருகின்றது.

 

ruto

 

 

 

இந்த எண்ணத்திற்கு முடிவுக்கட்டும் வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. அதாவது நெதர்லாந்து பிரதமர் ரூடே ஒரு வளாகத்தில் எலிவேட்டரில் நடந்து வருகிறார் அப்போது தன் கையில் கொண்டுவந்த காபியை எதிர்பாராத விதமாக கொட்டிவிடுகிறார்.

 

ruto

 

அதன் பின் அருகில் கிடக்கும் துடைப்பத்தை எடுத்து தானே அதை சுத்தம் செய்ய முன் வருகின்றார். அவருக்கு அந்த துடைப்பத்தை கையாள தெரியவில்லை ஆனாலும் சுத்தம் செய்கிறார். அதை கண்ட அருகில் இருந்த துப்புரவு பெண்மணிகள் பிரதமர் துடைப்பத்தை கையாள தெரியாமல் தடுமாறுவதை பார்த்து சிரித்தனர் இருந்த போதும் தான் கொட்டிய காபியை சிரித்துக்கொண்டே சுத்தம் செய்து முடித்தார் பிரதமர் ரூடே.

சார்ந்த செய்திகள்