
அண்மையில் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். தொடர்ந்து தற்பொழுது இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக எகிப்து சென்றுள்ளார்.
எகிப்து வந்தடைந்த பிரதமர் மோடிக்கு எகிப்து தலைநகரான கெய்ரோவில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று இரவு 7:40 மணிக்கு எகிப்து பிரதமர் முஸ்தபா மத்பௌலீயுடன் வட்ட மேசை சந்திப்பில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார். தொடர்ந்து 8.40 மணிக்கு எகிப்தில் வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இரவு 9 மணிக்கு எகிப்தின் தலைமை மத குருவைச்சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசியாக 1997 ஆம் ஆண்டு மோடி எகிப்து சென்ற நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)