Prime Minister Ismail announced the dissolution of the Malaysian Parliament!

Advertisment

மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மலேசிய நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய மலேசிய பிரதமர் இஸ்மாயில், நாடாளுமன்றத்தைக் கலைக்க மன்னரைச் சந்தித்து ஒப்புதல் பெற்றதாக அறிவித்துள்ளார். மலேசியாவில் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில், நாடாளுமன்றத்தைக் கலைக்க மன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரண்மனை வட்டார தகவல்கள் கூறுகின்றன.

மலேசிய நாட்டு அரசியல் சட்டத்தின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.