இலங்கை தேர்தல் - 69 இடங்களில் துப்பாக்கிச்சூடு

2020 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியுடன் இலங்கையின் தற்போதைய அதிபர் சிறிசேன வின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு நடத்தப்படும் இந்த அதிபர் தேர்தலுக்காக, நாடெங்கும் சுமார் 12 ஆயிரத்து 845 வாக்குச்செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 35 பேர் போட்டியிடும் இந்த தேர்தலின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பர்க்கபப்டுகிறது.

இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்த இந்த தேர்தலுக்கான வாக்கு எண்னும் பணியும் தற்போது தொடங்கியுள்ளது. காலையில் இந்த தேர்தல் தொடங்கி மாலை 5 மணியளவில் முடிவடைவதற்குள் மட்டும் இலங்கையில் நாடெங்கும் சுமார் 69 இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக மன்னார் பகுதியில் நடந்த வன்முறை துப்பாக்கிச் சூடு நடத்தும் அளவுக்கு பெரிதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

srilanka
இதையும் படியுங்கள்
Subscribe