ADVERTISEMENT

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

05:11 PM Sep 12, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ஏற்கனவே மொராக்கோவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மாரேஷ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்பொழுது வரை அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இருந்து வடக்கே சுமார் 524 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்க தகவலால் அங்கிருக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT