ADVERTISEMENT

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

01:34 PM Jan 01, 2024 | mathi23

ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று (01-01-24) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.4 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் ஹோன்சு பகுதி அருகே அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

ஹோன்சு அருகே 13 கி.மீ ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அடுத்து சுனாமி எச்சரிக்கை அந்நாட்டுக்கு விடுக்கப்பட்டுள்ளது. அதில், டோயாமா, இஷிகவா, நிகாடா, ஹையோகா ஆகிய பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுனாமியானது, சுமார் 5 மீட்டர் உயரத்துக்கு தாக்கக்கூடும் என்றும் கூறியுள்ளது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் வேகமாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT