
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அறிவிப்பின்படி நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் ஹைக்கைடோ என்ற இடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் தற்பொழுது வரை வெளியாகவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைக்கைடோ பகுதியில் உள்ள ஹோன்ஷு என்ற தீவில் ஆயிரக்கணக்கான காகங்கள் ஒரே இடத்தில் குவியும் காட்சிகள் வைரலாக பரவி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.