Powerful earthquake in Chile

Advertisment

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டு நேரப்படி நேற்று இரவு (18.07.2024) 09.50 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ரிக்டராகப் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது சிலி நாட்டின் சான் பெட்ரோ டி அட்காமாவில் இருந்து 20 கி. மீ. தொலைவில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகள் குலுங்கியதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.