Powerful earthquake in the Caribbean Sea

கரிபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்குச் சுனாமி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலில் கேமன் தீவுகள் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 8 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹோண்டுராஸுக்கு வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவிலும், கேமன் தீவுகளுக்குத் தென்மேற்கே 209 கி.மீ. தொலைவில் உள்ள கரிபியன் கடலில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து கொலம்பியா, கேமன் தீவுகள், ஜமைக்கா, போர்ட்டோ ரிக்கோ, கோஸ்டாரிகா மற்றும் நிகரகுவா உள்ளிட்ட தீவுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.