Advertisment

"இதன்மூலம் கரோனா பரவுவது அரிது" - ஆறுதல் அளிக்கும் அமெரிக்கா!

corona

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனாபரவல், வேகமெடுத்துள்ளது. கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தாலும், கரோனா பரவல் அதிகரித்தேவருகின்றது. இந்தநிலையில், அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம், ஆறுதல் அளிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

கரோனாபாதிக்கப்பட்டவர்கள் தொடும் இடத்திலிருந்து மற்றவர்களுக்கு கரோனாபாதிப்பு ஏற்படும் என கருதப்பட்டு வந்தது. இதனையொட்டியே கரோனாபாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், அவர்கள் பயன்படுத்திய இடங்களும்தீவிரமாக தூய்மைப்படுத்தப்பட்டுவருகின்றன. சமீபத்தில் அமெரிக்க மருத்துவ நிபுணர் ஒருவர், அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “கரோனா பரவிய இடத்திலிருந்து இன்னொருவருக்கு கரோனா பரவியதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை” என தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில்அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம், கரோனாதடுப்பிற்கானபுதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கரோனா பரவியுள்ள இடத்தை தொடுவதன் மூலம், இன்னொருவருக்கு பரவுவது என்பது கிட்டத்தட்ட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவியுள்ள இடத்தை தொடுவதன் மூலம் இன்னொருவருக்கு கரோனாபரவுதல் என்பது 10,000 நிகழ்வுகளில், ஒன்றுக்கும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10,000 முறை, கரோனாபரவியுள்ள இடத்தைஒருவர் தொட்டாலும், அதில் ஒன்றிற்கும் குறைவான முறையே தொட்டவருக்குகரோனாபாதிப்பு ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர் இருமும்போது, அவர் வாய் மற்றும் மூக்கு வழியாக வெளியேறும் துளிகளால் மட்டுமே கரோனா அதிக அளவில் பரவுகிறது எனவும்அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு & பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.

America corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe