ADVERTISEMENT

”பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

12:39 PM Sep 19, 2018 | santhoshkumar


போப் பிரான்ஸிஸ், ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடம், “ பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு, தவறான ஒரு விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

போப்,ஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள கிரோனபில் டியோசிஸ் உள்ள கத்தோலிக்க இளைஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது,” பாலியல் உடலுறவு என்பது தவறானது இல்லை, அது கடவுளின் பரிசு. அது நெடுவாழ்க்கை ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ”அந்த பரிசை நாம் பார்னோகிராபி என்னும் பாலிய வயது படங்களை பார்பதன் மூலம் இழந்துகொண்டிருக்கிறோம். இந்த பார்னோகிராபி படங்களை பார்பதன் மூலம் பாவங்களை சேர்த்துகொண்டிருக்கிறோம். இது பாலியல் உறவின் மேல் உள்ள காதல் இல்லை.” என்றார்.

”இந்த பரிசு அன்பை வெளிப்படுத்தவும், வாழ்க்கையை உருவாக்கமும்தான் படைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இறுதியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு குற்றச்செயல், திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது, எல்லாம் தவறானது என்று கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT