Skip to main content

”பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

Published on 19/09/2018 | Edited on 19/09/2018
pope


போப் பிரான்ஸிஸ்,  ஃப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்களிடம், “ பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு, தவறான ஒரு விஷயம் அல்ல” என்று கூறியுள்ளார்.
 

போப்,ஃப்ரான்ஸ் நாட்டிலுள்ள கிரோனபில் டியோசிஸ் உள்ள கத்தோலிக்க இளைஞர்களிடம் கலந்துரையாடினார். அப்போது,” பாலியல் உடலுறவு என்பது தவறானது இல்லை,  அது கடவுளின் பரிசு. அது நெடுவாழ்க்கை ஆணும் பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வதற்காக படைக்கப்பட்டது. அதை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
 

மேலும், ”அந்த பரிசை நாம் பார்னோகிராபி என்னும் பாலிய வயது படங்களை பார்பதன் மூலம் இழந்துகொண்டிருக்கிறோம். இந்த பார்னோகிராபி படங்களை பார்பதன் மூலம் பாவங்களை சேர்த்துகொண்டிருக்கிறோம். இது பாலியல் உறவின் மேல் உள்ள காதல் இல்லை.” என்றார். 
 

”இந்த பரிசு அன்பை வெளிப்படுத்தவும், வாழ்க்கையை உருவாக்கமும்தான் படைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார். இறுதியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு குற்றச்செயல், திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது, எல்லாம் தவறானது என்று கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.       


  

சார்ந்த செய்திகள்

Next Story

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு; மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

Published on 28/03/2022 | Edited on 28/03/2022

 

vinayakan apologized talking controversially sexual relationship 10 women

 

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விநாயகன், சமீபத்தில் தான் நடித்த ’ஒருத்தி’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய விநாயகன், "சமீப காலமாக மலையாள சினிமாவில் மீ டூ குறித்து அதிகம் பேசப்படுகிறது, அது என்னவென்று எனக்கு புரியவில்லை. ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி அவருடன் உறவு வைத்துக் கொள்வதுதான் மீ டூ வா ? என்று தெரியவில்லை. எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால், அந்த பெண்ணிடம் என்னுடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பமா என கேட்பேன், அதற்கு  சம்பந்தப்பட்ட பெண் விருப்பம் தெரிவித்தால் உறவு வைத்துக்கொள்வேன். அதுதான் மீ டூ என்றால் அதை நான் திரும்பவும் செய்வேன். இப்படி என் வாழ்நாளில் நான் 10 பெண்களிடம் உறவு வைத்துள்ளேன்" எனக் கூறினார்.

 

இவரின் இந்த கருத்து மலையாள திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.  மேலும் நடிகர் விநாயகன் கருத்திற்கு எதிராக கேரளாவில் பெண்கள் அமைப்புகளும், நடிகை பார்வதி, இயக்குநர் விது  வின்சென்ட் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

 

இந்நிலையில் நடிகர் விநாயகன் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "நான் பெண்களுக்கு எதிராக அதன் தீவிரத்தை அறியாமல் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டேன். இது யாரையாவது பாதித்திருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

Next Story

பாலியல் குற்றங்களுக்கு வித்திடும் ஆபாச நடனம்: எலச்சிபாளையம் போலீசாரிடம் புகார்

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் சிவன் கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் மதுபான பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கனா பாய்ஸ் என்ற நடன கலைநிகழ்ச்சி குழு ஒன்றை வைத்துக் கொண்டு கோவில் திருவிழாக்களில்  பாரம்பரிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக கூறி நீதிமன்றத்தில் ஒப்புதல் ஆணைபெற்று மது பார்களில் நடனமாடும் அழகிகளை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை செய்து லச்சக்கணக்கில் சம்பாரித்துள்ளார்.

 

sexual dance

 

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாமக்கல் வையப்பன் மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவில் விழாவில் நடைபெற்ற திருவிழாவில்  பிரகாஷ் நடத்திய கலைநிகழ்ச்சி அங்கு கூடியிருந்த பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்ததாகவும் மிகவும் ஆபாசமாகவும் இருந்ததாக குற்றசாட்டு எழ நடன கலைஞர்களின் தலைவர் அஜித் ராஜா  பிரகாஷை தொலைபேசியில் தொடர்புகொண்டு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டுள்ளார். நீ இதே மாதிரிதான் பண்ணிக்கிட்டு இருப்பியா, இதுபோல ஆடும்  அவர்களை ஏதவாது  செய்துவிட்டால் யார் பொறுப்பு என  எச்சரித்துள்ளார். ஆனால் அவர் கேட்க்கும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனை கட் செய்துள்ளார் பிரகாஷ்.

 

sexual dance

 

ஆனால் அடுத்த சிலநாட்களிலேயே பிரகாஷின் நட்புவட்டாரத்தில் உள்ள சிலர் அஜித்ராஜாவை தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.  

 

இதனையடுத்து நடன கலைஞர்கள் சங்க தலைவர் அஜித்ராஜா எலச்சிபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

sexual dance

 

இது பற்றி அஜித்ராஜா கூறுகையில், சம்பந்தப்பட்ட நபரான பிரகாஷ் பெங்களூர் மற்றும் மும்பையில் பாரில் நடனமாடும் பெண்களை இங்கே கூட்டிவந்து அறையெடுத்து தங்கவைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளை நடத்துவதையே தொழிலாக செய்துவருகின்றார். பொள்ளாச்சி வழக்கில் கூட பிரகாசுக்கு தொடர்பிருப்பதாக சந்தகேமும் எங்களுக்கு உள்ளது எனக்கூறினார்.

 

இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகளே பாலியல் குற்றங்களுக்கு முதல் காரணமாகும், இதுபோன்ற நிகழ்ச்சிகள்தான் பாலியல் குற்றங்கள் நடைபெற உந்துதலாக இருக்கிறது. ஆனாலும் இன்று வரை தென் மாவட்டங்களில் இதுபோன்ற ஆபாச நடனங்கள் தடை செய்யப்பட்டாலும் அதையும் மீறி சிலர் இதை தொழிலாக செய்துதான் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.