Advertisment

அளவுக்கு அதிகமாக பாப்கார்ன் சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி!

அளவுக்கு மீறி பாப்கார்ன் சாப்பிட ஒருவர் இதய அறுவகை சிகிச்சை செய்யும் அளவுக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்தவர் ஆடம். இவர் அப்பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அடிக்கடி பாப்கார்ன் சாப்பிடும் பழக்கம் உடையவர். இது நாளடைவில் அதிகப்படியான அளவிற்கு சென்றுள்ளது. பாப்கார்ன் இல்லாமல் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு சென்றுள்ளார்.

Advertisment

மேலும், பாப்கார்ன் சாப்பிட்டு முடித்ததும் அவருடைய பல் இடுக்குகளில் சிக்கிய பாப்கான்களை கையில் கிடைத்த பொருட்களை கொண்டு குத்தியுள்ளார். இதனால் ஈறுகளில் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் ஈறுகள் முழுவதும் சேதமடைந்து அவருடைய இதயத்தினை பாதித்துள்ளது. சில நாட்களில் அவருக்கு காய்ச்சல் ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் தீவிரமாக சோதித்ததில் அவருக்கு இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர். இதனால் அவருக்கு தற்போது தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Advertisment

VIRAL PHOTO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe