பிரபல பாப் இசை பாடகியான சூலி தனது இல்லத்தில் மரணமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
25 வயதே ஆனஇவர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்தவர் ஆவார். தென் கொரியாவைச் சேர்ந்த இவர் பிரபல பாப் இசை குழுவான F(x) -ல் முக்கிய பாடகராக இருந்தார். பின்னர் நடிப்பின் மீது இருந்த ஆர்வதால் அக்குழுவிலிருந்து 2015 ஆம் ஆண்டு வெளியேறினார். அதன் பின்னர் சமூகம் மற்றும் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான விஷயங்களில் குரல் கொடுத்து வந்தார். இந்தநிலையில் சூலியின் மேலாளர் சியோலின் அருகே உள்ள சூல்லியின் இல்லத்தில் அவரை இறந்த நிலையில் கண்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறை அவரது உடலை கைப்பற்றியது. மேலும் சூலியின் மரணம் கொலையா தற்கொலையா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 25 வயதே ஆன சூலியின் மரணம் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில்கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.