பிரேசில் நாட்டில் ஒரு திருடன் ஒரு பெண்ணிடம் திருட முயற்சித்த போது அந்த பெண்ணால் ரத்தக்காயம் வருமளவு தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் ஊபர் காருக்காக காத்துக்கொண்டிருந்த போது அவரின் முதுகில் அட்டையாலான துப்பாக்கியை வைத்து ஒருவர் மிரட்டியுள்ளார். அந்த பெண்ணின் செல்போனை கேட்டு மிரட்டிய அவர், போனை தரவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த திருடனை பிடித்து அந்த பெண் தாக்க ஆரம்பித்துள்ளார். ரத்தக்காயம் ஏற்படும் அளவுக்கு அந்த நபரை தாக்கிய பின்பு காவல்நிலையத்திற்கு இழுத்து சென்று அவனை போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். அதன் பிறகு நடந்த விசாரணையில் அந்த பெண் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது தெரியவந்தது. பொல்வியா வியனா என்ற 26 வயதான அந்த பெண் ஒரு யு.எப்.சி குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வென்றவர் என்பதும் பிறகு தெரியவந்தது. இந்த சம்பவம் தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அட்டை துப்பாக்கியுடன் போய், பெண்ணிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நபர்...
Advertisment