Advertisment

விமானத்தில் அவசரக்கால கதவைத் திறக்க முயன்றவர் கைது

Police have arrested American man for trying  open  emergency door of  plane

நடுவானில் விமானத்தின் அவசரக்கால கதவைத்திறந்த முயன்றநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் போஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்கசரியாக 45 நிமிடங்களுக்கு முன்னர் பயணி ஒருவர் விமானத்தின் அவசரக்கால கதவைத்திறக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த விமானத்தின் ஊழியர், அந்தப் பயணியைத்தடுக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பயணி, விமான ஊழியரைத்தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்பு சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து போஸ்டன் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்தான்என்றும், அவரது பெயர் சிவிரோ டாரஸ் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

arrested Plane emergency
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe