தனிநாடு கோரிக்கை: பாகிஸ்தான் பேரணியில் பிரதமர் மோடியின் படங்கள்!

modi placards

பாகிஸ்தானின்சிந்து மாகாணமக்கள், 1967 முதல் ‘சிந்துதேஷ்’ என்ற தனிநாடுகோரிக்கையை எழுப்பி வருகின்றனர். இந்த தனிநாடுகோரிக்கை முதன்முதலாகஜி.எம் சையத் மற்றும் பிர் அலி முகமது ராஷ்டி ஆகிய சிந்து மாகாண தலைவர்களால் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், ஜி.எம் சையத்தின் 117வது பிறந்தநாள், நேற்று (17/01/2021) சிந்து மாகாணத்தில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி,‘சிந்துதேஷ்’ கோரிக்கையை வலியுறுத்தி அங்கு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் கலந்துகொண்ட சிந்து மாகாண மக்கள், சுதந்திர கோஷங்களை எழுப்பியதுடன், ‘சிந்துதேஷ்’ கோரிக்கைக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என வலியுறுத்தினர். பேரணியில் ஈடுபட்டவர்கள், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களின் உருவப்படங்களை ஏந்தியிருந்தனர். அதில் சிந்து மாகாணம், பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற விரும்புகிறது என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

freedom modi Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe