Advertisment

'கோழைத்தனமான தாக்குதல்'-பிரதமர் மோடி கண்டனம்

PM Modi condemns 'cowardly attack'

Advertisment

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர்ராபர்ட் ஃபிகோ மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடியும் கண்டனத்தையும், வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.

59 வயதான ராபர்ட் ஃபிகோஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ஆவார். இவர்தங்களுடைய ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடத்தினார். ஐந்து முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த பிரதமர் ராபர்ட் ஃபிகோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

PM Modi condemns 'cowardly attack'

Advertisment

தொடர்ந்து துப்பாக்கி சூட்டை நிகழ்த்திய நபரை போலீசார் கைது செய்தனர். இந்த பகிரங்க தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.அதேநேரம் இது தீவிரவாத தாக்குதல் அல்ல எதிர்க்கட்சியினரின்சதி என அந்நாட்டின் துணை பிரதமர் அறிவித்துள்ளார். இந்நிலையில்ஸ்லோவாக்கியாபிரதமர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில் 'ஸ்லோவாக்கியாபிரதமர் மீது கோழைத்தனமான கொடூர தாக்குதல் நடந்துள்ளது. அவர் விரைவில் குணமடைய விளைகிறேன்' என தெரிவித்துள்ளார்.

modi GunShot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe