பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்; 16 பேர் உயிரிழப்பு!

bangaladesh-flight

விமானப்படையின் போர் விமானம் ஒன்று பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

வங்கதேசத்தின் டாக்காவில் விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று, இன்று (21.07.2025) விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாகப் போர் விமானம் ஒன்று தியாபரியில் உள்ள பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் விமானம் விழுந்து நொறுங்கித் தீ பிடித்ததில் 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விமானம் விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் வானுயர புகை எழும் காட்சிகளும், விமானம் தீப்பற்றி எரியும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதை பதைக்க வைக்கிறது.

Bangladesh flight incident school
இதையும் படியுங்கள்
Subscribe