Advertisment

தரையிறங்கும் போது ஏரிக்குள் விழுந்த விமானம்; 19 பேர் பலி

The plane fell into the lake while landing in Bukoba!

தான்சானியா நாட்டின் பெரிய நகரமான டார் எஸ் சலாமில் இருந்து 43 பயணிகளுடன் சென்ற விமானம் புகோபாவில் தரையிறங்க முயன்ற போது, விக்டோரியா ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisment

முதற்கட்டமாக 20- க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விமானத்தைத் தரையிறக்கும் போது கோளாறு எதுவும் ஏற்பட்டதாஎன்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிக வேகமாக வீசிய காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

incident flight tanzania
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe