Skip to main content

விபத்துக்குள்ளான விமானம் எங்களுடையது - அமெரிக்கா அறிவிப்பு!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020

பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானில் உள்ள ஹிராட் நகரில் இருந்து காபூல் நோக்கி விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. வானிலை சரியில்லாத காரணத்தால் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் 5 மணி நேரம் காத்திருந்து அந்த விமானம் புறப்பட்டது.



இதற்கிடையே விமானம் அந்நாட்டின் டெக்யாக் பகுதியை கடந்து செல்லும்போது எதிர்பாராத விதமாக தரையில் மோதி சிதறியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது. விமானம் தரையில் மோதியது தீப்பிடித்ததால் பயணிகள் யாரும் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த விமானம் தங்களுக்கு சொந்தமானது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானம் தரையிறங்கிய வேகத்தில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

The passengers were in for a shock as the plane landed

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமானம் ஒன்று  தரையிறங்கிய வேகத்தில் மீண்டும் மேலே எழும்பியது. இதனால் அதிலிருந்த பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

 

சண்டிகரிலிருந்து சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகா ஏர்லைன்ஸ் விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் படேல் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் திங்கட்கிழமை இரவு 8.40 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், விமானம் தரையிறங்கியதும் மீண்டும் மேலே பறக்க ஆரம்பித்ததால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

 

இரவு 9:15 மணிக்கு தரையிறங்க வேண்டிய அந்த விமானம் முன்னரே தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. எனவே விமானம் தரையிறக்கப்படுவதற்கான ஒப்புதல் கிடைக்காததால் சிறிது நேரத்திற்குள் விமானத்தை பறக்கவிட்டு மீண்டும் சரியான ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விமானம் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது.

 

 

Next Story

விமானத்தில் அவசரக்கால கதவைத் திறக்க முயன்றவர் கைது

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

Police have arrested American man for trying  open  emergency door of  plane

 

நடுவானில் விமானத்தின் அவசரக்கால கதவைத் திறந்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து போஸ்டன் நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் போஸ்டன் விமான நிலையத்தில் தரையிறங்க சரியாக 45 நிமிடங்களுக்கு முன்னர் பயணி ஒருவர் விமானத்தின் அவசரக்கால கதவைத் திறக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த விமானத்தின் ஊழியர், அந்தப் பயணியைத் தடுக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

 

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பயணி, விமான ஊழியரைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. பின்பு சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து போஸ்டன் விமான நிலையத்தில் வைத்து போலீசார் அந்த நபரைக் கைது செய்தனர். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்தான் என்றும், அவரது பெயர் சிவிரோ டாரஸ் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.