துணை அதிபர் சென்ற விமானம் மாயம்; மலாவி நாட்டில் பதட்டம்

Plane carrying Malawi Vice President goes missing

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மலாவி நாட்டின் துணை அதிபராக சவ்லோஸ் சிலிமா(51) இருந்து வருகிறார். இவர் நேற்று(10.9.2024) தலைநகர் லிலொங்வேயில் இருந்து விமானத்தின் மூலம் புறப்பட்டுச்சென்றார். துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாவுடன் 9 பேர் அந்த விமானத்தில் பயணித்துள்ளனர். லிலொங்வேயில் இருந்து புறப்பட்ட விமானம் மசுஸு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் துணை அதிபர் சென்ற விமானம் பாதியிலேயே மாயமாகியுள்ளது. விமானம் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து விலகியதால், விமானம் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலாவி நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா மாயமான விமானத்தைத்தேட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது மாயமான விமானத்தைத்தேடும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. துணை அதிபர் சென்ற விமானம் மாயமாகியுள்ளதால் மலாவி நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Plane
இதையும் படியுங்கள்
Subscribe