
அமெரிக்காவின்நியூயார்க் நகரில் உள்ள பிரபலமான இடம் ஒன்றிற்கு பிள்ளையார் கோவில் தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

வட அமெரிக்காவில் ஒரு பகுதியில் கடந்த 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக ஸ்ரீ மகா வல்லப கணபதி கோவில் என்ற கோவில் கட்டப்பட்டது. அமெரிக்காவின் மத சுதந்திரத்திற்காக போராடிய ஜான் பவுனே என்பவரை போற்றும் வகையில் நியூயார்க்கின் குயின்ஸ் தெருவிற்கு பவுனே என அவரது பெயர் சூட்டப்பட்டது. அந்த தெருவின் முனையில்தான் உள்ளது ஸ்ரீ மகா வல்லப கணபதி கோவில். அப்பகுதியின் அடையாளமாகவும்அந்த பிள்ளையார் கோவில் இருந்துவரும் நிலையில், அந்த கோவிலை கௌரவப்படுத்தும் விதமாக அந்தப்பகுதிக்கு பிள்ளையார் கோவில் தெரு ( Ganesh Temple Street) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயல் அங்குள்ள அமெரிக்க வாழ் இந்தியர்களை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதற்காக நடைபெற்ற விழாவில் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)