Advertisment

பைக்கில சிங்கிள்ஸ் பார்த்திருப்பிங்க...ஃபிளைட்ல பார்த்திருக்கிங்களா?

solo flight

Advertisment

விமானத்தில் தனியாக செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் தனிவிமானம் இருக்க வேண்டும் அல்லது அனைத்து டிக்கெட்டையும் வாங்கும் அளவுக்கு வசதி இருக்க வேண்டும். இது எதுவும் இல்லை நானே சாதாரான டிக்கெட்டை எடுத்துவிட்டுதான் விமானத்தில் செல்கிறேன் என்றால், நம்மை தவிர வேறு யாரும் விமானத்தில் டிக்கெட் வாங்கியிருக்க கூடாது. பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மேலே சொன்னவற்றில் கடைசியாக குறிப்பிட்டுள்ள விஷயம்தான் நடந்திருக்கிறது. விமானத்தில் சாதாரான எக்கனாமி கிளாஸ் டிக்கெட்டை வாங்கிவிட்டு, யாரும் இல்லாத விமானத்தில் ஒருவராக பயணித்திருக்கிறார் லூயிஸ் என்ற பெண்.

கடந்த டிசம்பர் 24ஆம் தேதி பிளிப்பைன்ஸ் நாட்டில் லூயிஸ் எரிப்ஸ் என்ற பெண் டாவோவில் இருந்து மனாலி என்னும் ஊருக்கு செல்ல பிளிப்பைன்ஸ் ஏர்லைன்ஸில் டிக்கெட் புக் செய்திருக்கிறார். விமான நிலையத்திற்கு வந்து விமானம் ஏறி உள்ளே அமர செல்லும் வரை அவருக்கு அது ஒரு சாதாரான விமான பயணமாக இருக்கும் என்றே நினைத்திருக்கிறார். ஆனால், விமானத்திற்கு உள்ளே சென்று சென்று அமர்ந்தபோதுதான் தெரிந்திருக்கிறது தான் ஒருவர் மட்டும்தான் இந்த விமானத்திலேயே பயணம் செய்கிறோம் என்று. முதலில் விமானத்தில் இருக்கும் அனைத்து சீட்டுகளும் காலியாக இருந்ததால் பயந்திருக்கிறார். பின்னர் அது பலகுவிட்டதால் விமானம் மேலே சென்றபோது பயமும் பறந்துவிட்டது.

ticket

Advertisment

அந்த விமானத்தில் லூயிஸை தவிர, விமான வேலை பார்பவர்கள் மட்டுமே அவருடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் அனைத்து பயணிகள் இருக்கும்போத் கொடுக்கப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற சொல்லி மைக்கில் பேசியுள்ளனர். அவருக்கு உணவு, டிரிங்ஸ் அனைவருக்கும் தருவதுபோன்று தந்து, அவருடைய பயணத்தை மேலும் சிறப்பித்துள்ளனர்.

விமானத்தில் ஒருவர் மட்டுமே இருப்பதை மொபைலில் புகைப்படம் எடுத்து, பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திகொண்டார். விமான கேபினில் இருந்த விமான பையலட், பணிப்பெண்கள் ஆகியோர் லூயிசுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். விமானத்தில் இதுபோன்று தனி ஆளாக பயணம் செய்வது இது புதிதல்ல, பலருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

lady funny news phillipines
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe