Skip to main content

என்ன ஒரு புத்திசாலித்தனம்..! இணையத்தில் வைரலாகும் பெண்ணின் செயல்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

விமானத்தில் பயணிப்போர் பலருக்கும் கடினமான ஒரு விஷயம், விமான நிறுவனம் அறிவித்துள்ள எடைக்குள்ளான லக்கேஜுகளை எடுத்து செல்வதே. அந்த வகையில் அதிக அளவில் இருந்த தனது பையின் எடையே குறைக்க இளம்பெண் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

philippines girl viral airport idea

 

 

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோட்ரிக்ஸ் என்ற இளம்பெண், கடந்த 1ஆம் தேதி விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த உடமையின் எடை 9 கிலோ இருந்துள்ளது. ஆனால் பையில் உள்ள உடைமைகள் எடை 7 கிலோவுக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்த உடைகளை வெளியே எடுத்த அவர், ஒன்றன் மீது ஒன்று அணிந்துகொண்டுள்ளார். இதுபோல செய்து பையின் எடையை 6.5 கிலோவிற்கு கொண்டுவந்துள்ளார். இதன்மூலம் கூடுதல் கட்டணம் செலுத்துவதிலிருந்து அவர் தப்பித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி உள்ளதோடு, பலத்த சிரிப்பலையையும் ஏற்படுத்தி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

A powerful earthquake in the Philippines

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

பிலிப்பைன்ஸின் மிண்டோனா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். 

 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Powerful earthquake in the Philippines

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஏற்கனவே மொராக்கோவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மாரேஷ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்பொழுது வரை அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இருந்து வடக்கே சுமார் 524 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்க தகவலால் அங்கிருக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.