கரோனா மாத்திரை! - தடுப்பூசி நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!

corona tablet

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்குபல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதில், ஒன்று பைசர் தடுப்பூசி.அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோ என்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய இந்த கரோனா தடுப்பூசி, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இந்த தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இந்தநிலையில், பைசர் நிறுவனம், கரோனாதொற்றுக்கு மாத்திரையைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்தநிலையில்இந்த மாத்திரைக்கானமுதற்கட்ட ஆய்வகப் பரிசோதனைகளைபைசர் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம், கரோனாதொற்று அறிகுறி ஏற்பட்டதுமேஇந்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

corona virus coronavirus vaccine pfizer
இதையும் படியுங்கள்
Subscribe