style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி விபத்தில் 50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில்உள்ள கிசாண்டு என்ற நகரில் நேற்று பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி எதிரில் வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பெட்ரோல் டேங்கர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. வானளவில் எழும்பிய தீ பிழம்புகளால் விபத்து நடத்த இடத்திற்குஅருகில் இருந்த சாலை மற்றும்வீடுகளுக்கும் வேகமாகப் தீபரவ தொடங்கின. இந்த கொடூர தீ விபத்தில்50 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.