Peshawar's Dir Colony incident

Advertisment

பாகிஸ்தானில் மதராஸா அருகே ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு ஒன்றில் ஏழு பேர் பலியாகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் நகரமான பெஷாவரின் டிர் காலனியில் உள்ள ஒரு மதரஸாவில் இன்று காலை திடீரென மிகப்பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இதுவரை ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 70 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு போலீஸார் மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.