கிட்டதட்ட 80 அடி உயரத்தில் வயதான ஒருவர் 72 நாள் தங்கியிருந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 அடி உயரத்தில் நின்றாலே சிலருக்கு தலை சுற்றலில் ஆரம்பித்து வாந்தி வரை சிலர் எடுத்துவிடுவார்கள். இந்நிலையில், தென்ஆப்ரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் என்பவர் சுமார் 82 அடி உயரமுள்ள ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள பீப்பாயில் கடந்த 72 நாட்களாக தங்கியுள்ளார்.

Advertisment

sd

இவர் 23 ஆண்டுகளுக்கு முன்னரே 1997ம் ஆண்டு இதே போன்று 25 மீட்டர் உயரத்தில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்திருந்தார். தன்னுடைய முந்தைய சாதனையை தற்போது அவரே முறியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.