Skip to main content

அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட பெரியார் - அண்ணா பிறந்தநாள் விழா

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
periyar-anna-bday-

 

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில் செப் 29, 2018, சனிக்கிழமையன்று டெலவர் பள்ளத்தாக்கு தமிழ் நண்பர்கள் தந்தை பெரியாரின் 140வது மற்றும் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாளை பெரு விழாவாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் டெலவர், பென்சலவேனியா, நியூ செர்சி, மேரிலாந்து மற்றும் விர்சீனியா மாநிலத்திலிருந்து திரளாக தமிழ் மக்கள் வந்து கோலகலமாகக் கொண்டாடி, கருத்துகளை பகிர்நது மகிழ்ந்தனர்.
 

இவ்விழாவின் சிறப்பாக பல்வேறு போட்டிகள் நடைப்பெற்றன. திருமிகு. ரமா ஆறுமுகம் மற்றும் திருமிகு. ஜெசிபிரியா பிரசாத் விழாவினை அருமையாக தொகுத்து வழங்கினார்கள். 


 

periyar-anna-bday-


 

சிறுவர்களுக்கான ஓவியப்போட்டியில் (7 வயது வரை) செல்வி. சாஷின் செல்வகுமார் முதலாம் இடத்தையும், செல்வி.கனியன்பு துரைக்கண்ணன் இரண்டாம் மற்றும் செல்வன்.ஆதித் மூன்றாம் இடத்தை வென்றனர். 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்ட ஓவியப்போட்டியில் செல்வன். அறிவாற்றல்  முதலாம் இடத்தையும், செல்வன். கௌதமராஜ் இரண்டாம் மற்றும் செல்வி.ரித்திகா மகேந்திரன் மூன்றாம்இடத்தை பெற்று பரிசை தட்டிச்சென்றனர்.


இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரும் ரஜினி தென்னிந்திய உணவகம், டெலவர் அளித்த மதிய உணவை உண்டு மகிழ்ந்தனர். திருமிகு. ஜெய் (ரஜினி தென்னிந்திய உணவகம் உரிமையாளர்) கூறுகையைில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சமூகநீதி தொண்டினால் தான், என் போன்ற எளிய பிள்ளைகள் அமெரிக்கா வரவும், இவ்வுயரத்தை அடையவும் முடிந்தது. அதற்கு நானும், எங்கள் உணவகமும் செய்யும் சிறு நன்றிக்கடனே இது என்று சிலாகித்தார்.


தொடர்ந்து வினாடி வினாப் போட்டிகள் நடைபெற்றன. 9 குழுக்குள், 17 குழந்தைகள் பங்கு பெற்றனர். குழுவின் பெயர்களாக பெரியார், அண்ணா அவர்கள் பங்களித்த பத்திரிக்கைகளின் பெயர்கள் (விடுதலை, குடியரசு, Revolt (புரட்சி), காஞ்சி, பாலபாரதி, மாலைமணி, நம்நாடு, Homeland (தாய்நாடு), நவயுகம்) சூட்டப்பட்டிருந்தது சிறப்பு. மொத்தம் 5 சுற்றுகள் என்று திட்டமிட்டருந்தது, இருப்பினும் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்துக்கு கடும் போட்டி நிலவியதால் அதிகச் சுற்றுகள் சென்றது. இறுதியில் முதல் பரிசை தட்டி சென்றது “குடியரசு” அணியில் போட்டியிட்ட செல்வி.ஹர்ஷினி கண்ணன் மற்றும் செல்வன். நரேன் கோபாலகிருஷ்ணன் ரேகா. இரண்டாம் இடத்தை “பாலபாரதி” அணியில் போட்டியிட்ட செல்வன்.பிரணவ் ஆதித்யா மற்றும் செல்வி. அமிர்த்தா ராமசுப்பரமணியம்-மும், மூன்றாம் இடத்தை “நம்நாடு” அணியில் போட்டியிட்ட செல்வன்.நவீன் சுரேஷ் மற்றும் செல்வன்.பிரத்யுஷ்  கார்த்திகேயன்-ம், முறையே தட்டிச்சென்றனர். 


 

periyar-anna-bday-




வினாடி வினா போட்டியை நடத்திய திருமிகு. ராஜ்குமார் களியபெருமாள் கூறுகையில், “பெரியார், அண்ணா வாழ்க்கை மற்றும் கொள்கைகள் சார்ந்த கேள்விகள் கேட்க்கப்பட்ன.  அண்ணாவைப் பற்றியோ அல்லது பெரியாரைப் பற்றியோ கட்டுரை எழுதுங்கள் என்று கூறினால் உடனே இரு பக்கம் எழுதி விடுமளவுக்கு பயிர்சி எடுத்திருக்கிறார்கள். இதுவே இந்த போட்டியின் நோக்கம்.  அது நிறைவேறியதாக உணர்கிறோம். கடல் கடந்த அமெரிக்க மண்ணில் பெரியாரிய சிந்தனைகளை பெரியார் பிஞ்சுகள் அறிந்து பதிலிளித்தது உள்ளபடியெ மகிழ்ச்சியளித்தது” என்றார். அவர்களைப் பயிற்றுவித்த பெற்றோர்களுக்கும் அவர் நன்றி கூறினார். 


திருமிகு. தனம் பெரியசாமி அவர்கள் சிறப்பு பேச்சாளராக வந்திருந்து சிறப்பளித்தார். ஈரோட்டில் பெரியார் வாழ்ந்த அதே தெருவில் பெரியார் வாழ்ந்த காலத்தில் வசித்தவர். பெரியாரை பற்றிய அரிய தகவல்களை அவர் கூறி மகிழ்ந்து அனைவரையும் மகிழ்வித்தார்.


அதனைத் தொடரந்து பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டியில் 9 நபர்கள் போட்டியிட்டு. அத்தலைப்பாவது, "’கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ - பேரறிஞர் அண்ணா”, “பகுத்தறிவுப் பகலவன் பெரியார்” மற்றும் “அமெரிக்காவும், தமிழ்நாடும் - சமூக நீதி ஓர் ஒப்புமைப் பார்வை” என்ற மூன்று தலைப்புகளில் பேசினர். முதல் இடத்தை திருமிகு.செல்வக்குமார் வேலு அவர்களும், இரண்டாம் இடத்தை திருமிகு.பிரிஸ்ஸில்லா அவர்களும் மற்றும் மூன்றாம் இடத்தை திருமுகு. விஜயலட்சுமி அவர்களும் பெற்றனர். 


விழாவின் முத்தாய்ப்பாக தமிழர் மரபான கும்மி மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கூடிய அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.


“சமூகநீதிக் காவலர்கள் பெரியார், அண்ணா” என்ற தலைப்பின் கீழ் சமூகநீதி, பகுத்தறிவு, சுயமரியாதை, பெண்ணியம் மற்றும் சமத்துவம் என்ற துணை தலைப்புகளோடு கருத்தரங்கம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திருமிகு. அல்லி, திருமிகு. தேவானந்த், திருமிகு. கிருஷ்ணன், திருமிகு. மெரிலின் மற்றும் திருமிகு. தீபன் பங்குப்பெற்று பெரியார், அண்ணா பற்றி கவிதைகளையும் செய்திகளையும் அரங்கத்திற்கு பகிரந்தனர். இக்கருத்தரங்கத்தை திருமிகு. பிரசாத் பாண்டியன் நெறியாள்கையை செய்தார்.


"சாமானிய மனிதர்கள்" என்ற தலைப்பில் பல தரவுகளுடன்  தோழர் முனைவர் சொர்ணம் சங்கர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவர் திரையில் 1901 முதல் தற்போது வரையிலான தமிழ் சமூக வளர்ச்சியின் வேகத்தையும், அதற்கான பெரியார், அண்ணாவின் பங்களிப்பையும் விவரித்துக் கூறினார்.  இதன் அதன் பின் தம்ழ்நாட்டிலிருந்து தனது மகனைப் பார்க்க அமெரிக்கா வந்திருந்த திருமிகு. வசந்த கோகிலா அவர்கள் நாகூர் அனிபாவின் “எங்களை ஏங்கவிட்டு  எங்கே சென்றாய்.. அண்ணா..” என்ற பாடலை அருமையாகப் பாட அரங்கமே அமைதியில் மூழ்கியது. அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


"தமிழகத்தின் விடிவெள்ளி பெரியார்" என்ற தலைப்பில் தோழர் திருமிகு. கனிமொழியின் பேச்சு அநீதிகளை வெடித்துச் சிதறவைக்கும் ஒரு துப்பாக்கித் தோட்டா போலிருந்தது. தற்கால அரசியலின் அநீதிகளைக் களைய பெரியாரின் சிந்தனைகள் எப்படி பயன்படும் என்று எடுத்துரைத்தார். 


விழாவிற்கு வந்திருந்த அனைத்து பெண்களுக்கும் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்ததை விழாக்குழுவில் ஒருவரான திரு.ராஜ்குமார் வழங்கினார்.


விழாவின் இறுதியாக பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவிற்கு வந்த அனைவருக்கும் திருமிகு. துரைக்கண்ணன் நன்றியுரை  கூற விழா இனிதே நிறைவுப்பெற்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.