Advertisment

வலுக்கும் மக்கள் போராட்டம்... இலங்கையில் ஊரடங்கு பிறப்பிப்பு!

 People's struggle to strengthen ... Curfew in Sri Lanka!

Advertisment

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுமக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பால், மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான பாதிப்புகளால் பொங்கி எழுந்த மக்கள், ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வாகனம் எரிப்பு போன்ற உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. கோத்தபய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கூட்டணி கட்சிகளும் ஆட்சியை கலைத்துவிட்டு காபந்து அரசை உருவாக்க வேண்டும் என நேற்று வலியுறுத்தி இருந்தன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டும் வரும் பொருட்டு, இலங்கையில் அவசரநிலையை அதிபர் கோத்தபய ராஜபக்சே பிரகடனப்படுத்தியுள்ளார்.

அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலம், நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை, இரும்புக்கரம் கொண்டு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சமூகவலைத்தளங்களின் வாயிலாகமக்கள் மிகப்பெரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதியான இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

struggle
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe