Advertisment

நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த மக்கள்... ரகசிய இடத்தில் கனடா பிரதமர்!

People who went on strike ... Prime Minister of Canada in a secret place!

கரோனா தடுப்பூசிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கனடா நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது. சரக்கு வாகனங்கள் மூலமாக பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர். மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Advertisment

இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பத்திரமாக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

coronavirus Canada
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe