உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருகட்டமாகஇந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைகுறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. உலகளவில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. 42,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும் நிலையில், இத்தாலிய மக்கள் தங்கள் உயிரைக் காக்க உதவாத பணம் தங்களுக்கு எதற்கு? என்று தெருக்களில் பணத்தை வீசியுள்ளது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்உலவி வருகின்றது. இத்தாலியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த புகைப்படம் இத்தாலியில் எடுக்கப்பட்டது அல்ல, 2019ம் ஆண்டு வெனிசுலாவில் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் வீதிகளில் எறிந்துள்ளனர் அப்போது எடுத்த புகைப்படம்தான் அது. ஆனால்அந்தப் புகைப்படத்தை,இத்தாலியில் எடுக்கப்பட்டது எனசிலர் வதந்திகளைபரப்பி வருகிறார்கள்.