Advertisment

மதபோதகரின் பேச்சைக் கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்த மக்கள்; 81 பேரின் சடலம் தோண்டியெடுப்பு

'இயேசுவை காணலாம் வாங்க' என போதகரின் பேச்சைக் கேட்டு 80க்கும் மேற்பட்டோர் கென்யாவில்பட்டினி கிடந்து உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கென்யாவின் மலிந்தி பகுதியில் உள்ள ஷஹாகோலா எனும் கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஒன்றில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய சோதனையில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை என மொத்தமாக 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் முதல் கட்டமாக கண்டெடுக்கப்பட்டது.'இயேசுவை காண வேண்டுமென்றால் பட்டினி கிடந்து நோன்பு இருக்க வேண்டும்' என்று மத போதகர் கூறியதை நம்பிய அப்பகுதி மக்கள் பட்டினி கிடந்துள்ளனர்.

Advertisment

இறுதியில் உணவின்றி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாருக்கும் தெரியாமல் வனப்பகுதியில் புதைக்கப்பட்ட பின்னணி வெளியானது. இது தொடர்பாக மத போதகர் பால் வேகன்ஸி கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது கட்ட தேடலில் பல சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மீட்கப்பட்ட சட்டங்கள் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது. உள்ளூர் குழுக்கள் நடத்தி வரும் தேடுதலில் மேலும் பல உடல்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.

fake saint christian kenya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe