ADVERTISEMENT

"ட்விட்டர் பயன்பாடுகளுக்கு கட்டணம்"- எலான் மஸ்க் அறிவிப்பு! 

02:53 PM May 04, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வணிக ரீதியான ட்விட்டர் சேவைக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனத்தை வாங்கியுள்ள எலான் மஸ்க், அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் வாங்கியுள்ளார். இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரவிருக்கும் சூழலில், அதன் பயன்பாட்டுக்கு கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சாதாரண பயனாளிகளுக்கு கட்டணம் இருக்காது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

எனினும், அரசு மட்டும் அரசு மற்றும் வணிக ரீதியான பயன்பாடுகளுக்கு மட்டும் ட்விட்டரைப் பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

தன்னை மிக மோசமாக விமர்சனங்கள் செய்பவர்கள் கூட ட்விட்டரில் தொடர்ந்து, நீடிக்கலாம் என்று கூறியுள்ள அவர், அதுதான் உண்மையான கருத்து சுதந்திரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT