Skip to main content

கடல் சீற்றம் - மோதிக்கொண்ட கப்பல்கள்!

Published on 21/12/2019 | Edited on 22/12/2019

மெக்சிகோவில் தனியாருக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்னிவேல் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த கப்பல்கள் 290 மீட்டர் நீளமுடையது. கடலில் ஏற்பட்ட அதிகப்படியான சீற்றம் காரணமாக ஒன்றுடன் ஒன்று உரசியது தெரியவந்துள்ளது.



இந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் கப்பலின் பக்காவாட்டு பகுதிகள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பே இந்த விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நார்ஃபோக் கப்பலில் இறங்கிய கடற்படை; சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
Indian Navy landed in Norfolk; Warning to Somali pirates

எம்.வி.லைலா நார்ஃபோக் சரக்கு கப்பல் சோமாலிய பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட நிலையில், அதில் சிக்கி உள்ள 15 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், அந்த கப்பலில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கவனிப்பதற்காக இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் சென்னை கப்பல் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின் தொடர்ந்து சென்றுள்ளது. தற்போது ஹெலிகாப்டர் மூலமாக இந்திய கடற்படை எம்.வி.லைலா நார்ஃபோக் கப்பலை நெருங்கி விட்ட நிலையில, சரக்கு கப்பலில் இந்திய கடற்படை இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடத்தல் நடத்திய கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை கமாண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கப்பலை விட்டு சென்று விட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவேளை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் கொடுப்பதற்கு இந்திய கடற்படை தயாராக உள்ளது. அதேபோல் சரக்கு கப்பலில் உள்ள 15 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் கடற்படை உறுதி செய்துள்ளது.

Next Story

இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்; ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய அமெரிக்கா

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Attack on Indian cargo ship; America shot down drones

இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்திய ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

மத்திய கிழக்கின் அரேபிய கடல் வழியாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா நோக்கி பயணிக்கும் கப்பல்களுக்கு அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அந்த பகுதிக்கு வந்துள்ளதுதான் இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் ட்ரோன்களை பயன்படுத்தி கப்பல்களை தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா இதேபோன்று பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு செங்கடல் வழியாக இந்திய கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் வழியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கேம் ப்ளூட்டோ என்ற அந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதனால் அந்த கப்பல் பழுதடைந்தது. இந்திய கடற்படை மற்றும் கோஸ்ட் கார்ட் கப்பல்கள் இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக இருந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.