ADVERTISEMENT

241 பேருடன் புறப்பட்ட விமானம்... நடுவானில் கழன்று விழுந்த பாகங்கள்... சாதுரியமாக செயல்பட்ட விமானி...

01:37 PM Feb 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவின் டென்வர் நகரிலிருந்து ஹொனலுலு பகுதிக்கு போயிங் 777-200 விமானம் ஒன்று, 231 பயணிகளோடும், 10 ஊழியர்களோடும் பயணத்தைத் தொடங்கியது. பயணத்தைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் என்ஜின் பழுதாகி தீப்பிழப்புகள் வெளிவர ஆரம்பித்தன. மேலும் என்ஜினின் சில பாகங்கள் கழண்டு விழத் தொடங்கின.

இதனையடுத்து விமானம் டென்வர் விமான நிலையத்திலேயே, விமானியால் சாமர்த்தியமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த 231 பயணிகளும், 10 ஊழியர்களும் காயமின்றி உயிர் தப்பினர். அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர், ‘என்ஜின் பழுதானபோது நாங்கள் அவ்வளவுதான் என நினைத்தோம்’ எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “நாங்கள் அவ்வளவுதான் என்று நினைத்தேன். நாங்கள் கீழே விழப்போகிறோம் என்று எண்ணினேன். விமானி அற்புதமாக செயல்பட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

விமானத்தின் என்ஜின் பழுதானது குறித்து அமெரிக்காவின் கூட்டாட்சி விமான நிர்வாகம், விசாரணை நடத்தி வருகிறது. எதனால் என்ஜின் பழுதானது என்பது குறித்த காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT